சாணத்தில் இருந்து இயந்திரம் மூலம் விறகு தயாரிக்கும் பணி: கோசாலையில் தொடக்கம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில் தொடங்கிய மாட்டு சாணத்தில் விறகு தயாரிக்கும் பணி
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், சாணத்திலிருந்து விறகு தயாரிக்கும் இயந்திரத்தை, கோவிந்தாபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சுவாமிகள் இயக்கி பணியைத் துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா எரவாஞ்சேரி அருகே திருவீழிமிழலை கோரக்ஷன சமிதியில், அரிய வகை நாட்டு பசுக்களை வளர்த்து, பராமரித்தும் வருகின்றனர்.ஒரு காலத்தில் சாணத்தை வயல்களுக்கு எருவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சாணம் வேறு எதற்கும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இருந்து வந்தது. தற்போது பல விதங்களில் பயன்பட்டு வருகிறது.
திருவீழிமிழலையில் உள்ள கோசாலையில், நாட்டு பசுக்களின் சாணத்தின் மூலம் கொசுவத்தி, பற்பொடி உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டு பசுக்களின் சாணத்தைக் கொண்டு சுற்றுப்புறம் பாதிக்காத வகையில் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.பல இடங்களில் எரியூட்டுவதற்கும், ஹோமங்கள், யாகங்கள் செய்வதற்கும்... மரங்கள் வெட்டப்படும் நிலையில்...இதற்கு மாற்றாகவும், மாசு பரவலை தடுக்கும் வகையிலும், இந்த கோசாலையில்.. தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக சாணத்தினால் விறகு தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து, விட்டல் மகராஜ் சுவாமிகள் கூறியதாவது: சாணத்தைக் கொண்டு விறகு போல தயார் செய்யக்கூடிய இயந்திரத்தை துவக்கி வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல எல்லா கோசாலைகளிலும் பயன்படுத்தினால் நல்ல மழை பெய்யும். இந்த வகையான விறகு. அடுப்பிற்கும், ஹோமங்களுக்கும் உபயோகப்படும், மேலும் சுற்றுச்சூழலை கெடுக்காது.. முக்கியமாக மரங்கள் காப்பாற்றப்படும்.என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu