நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X
நன்னிலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

நன்னிலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம், கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்டு. 05.07.2017 அன்று முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்.

அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது.. தரைப்பகுதியில் எப்பொழுதுமே தண்ணீர் நிற்கக்கூடிய நிலையும் உள்ளது.. இதனால் நீதிமன்றத்திற்குள், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் வருவதாகவும், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் வருகின்ற பொதுமக்கள் அச்சத்தில் நடமாடும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது..

நீதிமன்ற கட்டிடத்தை, நாகப்பட்டினம் பொதுப்பணித்துறை (கட்டிட பராமரிப்பு பிரிவு) உதவி பொறியாளர் அலுவலகம்தான் பராமரித்து வருவதாகவும், தற்போது பராமரிக்கப் படாமல் உள்ளதால் கட்டிடத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளது.. எனக் கூறுகின்றனர். மேலும், நீதிமன்ற வளாக நுழைவாயில் அருகே உள்ள நீதிபதிக்கான இருப்பிடம் பயன்படுத்தாமல் பாழடைந்த நிலையில் உள்ளதால், சமூக விரோதிகளின் இருப்பிடமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே நீதிபதி தங்கும் வீட்டினை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..

இதுகுறித்து நன்னிலம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் செல்.சரவணன் கூறியதாவது: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக நீதிமன்ற வளாகம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.. தற்பொழுது, நீதிமன்றத்துக்கு செல்லும் பாதை பழுதடைந்து உள்ளதாகவும்.நீதிமன்ற கட்டிடத்தை சுற்றிலும் புதர் மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்கள் கட்டிடத்திற்குள் செல்வதாகவும்.. இதனை சரி செய்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதர்களை நீக்கி, சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..." எனவும் கோரிக்கை வைத்தார்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!