திருவாரூரில் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூரில் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான   விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருவாரூர் தனியார் பள்ளியில்  பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர் தனியார் பள்ளியில் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் அருகே தனியார் பள்ளியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் "பாலின நுண் திறன்" அமைப்பு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா சேகர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும், பாலியல் நுண்திறன் அமைப்பு என்றால் என்ன? அதனை எப்படி அணுகுவது என்பது பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது . இதன் மூலம் மாணவிகள் எளிதாக பாலியல் துன்புறுத்தல் குறித்து தீர்வு காண இயலும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் பயிலும் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாகவும், எனவே தமிழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயன்பெற வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் கோரிக்கையாக வைக்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் நாகராஜன், விரிவுரையாளர்கள் வேல்முருகன், சிகாமணி, உதவி பேராசிரியர்கள் சித்தரஞ்சன் ,பிரேமா ,சியாமளா மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!