ராகு-கேது பெயர்ச்சியையொட்டி திருப்பாம்புரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள்

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி திருப்பாம்புரம் கோவிலில் முன்னேற்பாடு பணிகள்
X
திருப்பாம்புரம் ராகு கேது பரிகார கோவில் (பைல்படம்)
திருப்பாம்புரம் ராகு, கேது பரிகார தலமான சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு - கேது பெயர்ச்சி விழா முன்னேற்பாடு நடந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, ராகு, கேது ஸ்தலமான திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருப்பாம்புரம் வண்டார்குழலி உடனுறை பாம்புர நாதர் திருக்கோயிலில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக (ஏக சரீரமாக) இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் இந்தக் கோயில் ராகு கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது..

ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு பரிகார தலமாக விளங்க கூடிய. இந்த கோவிலில் வருகின்ற 21.03 .2022 திங்கட்கிழமையன்று மதியம் 3.13 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறது. அதனை முன்னிட்டு பரிகாரம் செய்யவண்டிய ராசிகர்களான மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மற்றும் மீன ராசிக்காரர்கள் முன்னதாகவே இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர்.

ராகு பகவானும் கேது பகவானும் ஒரே உருவமாக இந்த கோயிலில் அமைந்துள்ளதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனி பரிகார தலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. ஒரே இடத்தில் இந்த தளத்தில் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

ராகு-கேது பெயர்ச்சி நடைபெற சில நாட்களே உள்ள நிலையில்.. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business