தமிழ் தாத்தா உவேசா 168 -வது பிறந்தநாள்: அவரது உருவச் சிலைக்கு அரசு மரியாதை
உவேசா நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்த திருவாரூர் ஆட்சியர் காயத்ரி
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதஐயர் ஒலைச்சுவடி வடிவில் இருந்த இலக்கியங்களை அனைவரும் படிக்கும் வகையில் புத்தக வடிவில் பதிப்பித்து சிறப்பான பணியை தமிழுக்காக ஆற்றி இருக்கின்றார்கள்.ஒலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர். தீயில் எரிந்ததையும், தண்ணீரில் ஆற்று நீரில் சென்றதையும் எடுத்துப் பாதுகாத்து, ஒலை சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்து, ஆசிரியர், மாணவர் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சா ஆவார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட, உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா நினைவு இல்லத்தில் 168 வது பிறந்தநாள் விழாவையொட்டி உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu