திருவாரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் பரவும் அபாயம் தடுக்க கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் பரவும் அபாயம் தடுக்க கோரிக்கை
X

திருவாரூர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை.

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவும் அபாயம் இருப்பதால் அதனை தடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் குடவாசல், வலங்கைமான் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.. நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட பகுதியில் கால்நடை மருத்துவர்கள் 74 பேர் இருக்க வேண்டிய நிலையில்.. தற்பொழுது 14 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் பல இடங்களில் கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமிக்கப் படவில்லை..மேலும், சில இடங்களில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மருத்துவர்கள் வரும் நிலையும் உள்ளது. சில பகுதிகளில் கால்நடை மருத்துவமனை மூடப்பட்டும் உள்ளது..

கால்நடை மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாததாலும், தடுப்பூசி தட்டுப்பாட்டாலும். தற்பொழுது பல இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளது.இந்த நிலையில் கோமாரி நோயை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story