நன்னிலம் அருகே ஸ்ரீ வாஞ்சிநாதர் கோவிலில் எமவாகனத்தில் சுவாமி வீதி உலா
Ematharman Temple
Ematharman Temple-திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீ வாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. உலகத்தில் எம பயம் இல்லாதவர்கள் யாரும் இல்லை. அந்த எம பயத்தையும், பைரவ உபாதையையும் போக்கும் வகையில், உலகில் எங்குமே இல்லாத வகையில். எமனுக்கு என தனி சன்னதியும், வேண்டுவோர்க்கு ஆயுள் விருத்தி அளித்து அனுக்கிரக மூர்த்தியாக எமதர்மன் எழுந்தருளியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தின் முக்கிய விழாவான மாசி மக திருவிழா நடைபெற்று வருகிறது.சாபம் பெற்று தனது சக்தியை இழந்த எமதர்மன் ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட்டு தனது சக்தியை திரும்ப பெற்றதாக ஐதீகம். இதன் அடிப்படையில் எமதர்மனை வாகனமாக இறைவன் ஏற்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மாசி மக திருவிழாவின் இரண்டாம் நாளில் எமதர்மன் வாகனத்தில் அருள்மிகு வாஞ்சிநாதர் எழுந்தருளி எம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில். வாஞ்சிநாத சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து, வெள்ளி எமதர்மராஜா வாகனத்தில் சுவாமியை எழுந்தருள செய்து, தெற்கு மாட வீதியில் உள்ள எம தீர்த்த குளத்தில் அஸ்ரதேவருக்கு அபிஷேகங்கள் நடைப்பெற்று பின் தீர்த்தவாரி நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு வாஞ்சிநாதர் பரிவார சுவாமிகளுடன் வீதியுலா வந்தார். சுமார் 3 டன் எடையுள்ள உலகில் வேறு எங்கும் இல்லாத எமதர்மன் வாகனம் ஸ்ரீவாஞ்சியத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu