நன்னிலம் அருகே சாலையோரம் கொட்டிக்கிடந்த ஊசிகளால் பரபரப்பு

நன்னிலம் அருகே சாலையோரம் கொட்டிக்கிடந்த ஊசிகளால் பரபரப்பு
X

சாலையோரம் கொட்டப்பட்ட ஊசிகள்.

நன்னிலம் அருகே ரத்த மாதிரிக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சாலையோரம் கொட்டிக்கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா திருகண்டீஸ்வரம் ஊராட்சி சோத்தகுடி கிராமத்தில் மாநிலத்திற்கு உட்பட்ட குப்பை கிடங்கு அருகே சாலை ஒரத்தில் 300 க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உறைந்த ரத்தத்துடன் கொட்டி கிடந்தது.

தகவலின்பேரில், நன்னிலம் சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு சென்று சிரஞ்சிகளை சேகரித்து இது தனியார் இரத்த பரிசோதனை நிலையத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், இதை யார் இங்கு கொட்டியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!