ஸ்ரீவாஞ்சி நாதர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி விழா

ஸ்ரீவாஞ்சி நாதர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி விழா
X
சுவாமி தீர்த்தவாரி கண்டருளினார்.
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சி நாதர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீ வாஞ்சியத்தில் எமனுக்கு என தனி சன்னதி கொண்ட மிக பழமையான ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது.

வள்ளி,தேவசேனா சமேத முருகப்பெருமான்,வினாயகர்,சண்டிகேஸ்வர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பின்னர் சுவாமிகள் ஆலயத்தின் பிரகாரத்தில் வலம் வந்து நடவாகன மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.

கோவிலில் உள்ள 'குப்த கங்கை' என்ற புண்ணிய திருக்குளத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சரியாக இன்று காலை 'கடை ஞாயிறு தீர்த்தவாரி' மிக சிறப்பாக நடைப்பெற்றது. அப்பொழுது 3000 பக்தர்கள் குப்த கங்கையில் புனித நீராடினர்.

தொடர்ந்து.. வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது, பாதுகாப்பு பணியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture