செம்மங்குடி வரதராஜபெருமாள் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

செம்மங்குடி வரதராஜபெருமாள் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
X

செம்மங்குடி வரதராஜபெருமாள் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா செம்மங்குடி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மஹா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா செம்மங்குடி பிரகாரத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

கர்நாடக சங்கீத வித்வான் செம்மங்குடி சீனிவாச ஐயர் பிறந்த புண்ணிய பூமியில் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் 12 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டி நான்கு கால யாக பூஜைகளுடன் இன்று காலை நான்காம் கால யாக பூஜையின் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.

அதன் பிறகு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சரியாக 09.45 மணி அளவில் விமானம் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேங்காலிபுரம் பாலாஜி பட்டாச்சாரியார் ஸர்வ ஸாதகத்துடன் ஆலய பரம்பரை அறங்காவலர் கௌரிசங்கர்சாம்பசிவம், மற்றும் ஆலய அர்ச்சகர் வரதராஜ பட்டாச்சாரியார் மற்றும் ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் கிராம வாசிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!