குடவாசல் அருகே பள்ளி வளாகத்தில் மாணவன் திடீர் மரணத்தால் சோகம்

குடவாசல் அருகே பள்ளி வளாகத்தில் மாணவன் திடீர் மரணத்தால் சோகம்
X

பள்ளி வளாகத்தில் இறந்த வினித்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பள்ளி வளாகத்தில் மாணவன் திடீர் மரணத்தால் சோகம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, எரவாஞ்சேரி அருகே தேதியூர் சன்னதி தெருவில் வசித்து வரும் மணிகண்டன் -கார்த்திகா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகனான 11 வயதுடைய வினித் தேதியூரில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான்..

காலை வழக்கம் போல வினித் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்தநிலையில் வகுப்பு ஆசிரியரிடம் உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது.. அப்பொழுது வினித்தை ஓய்வு எடுக்குமாறு கூறி வகுப்பில் படுக்க வைத்துள்ளனர். இந்த நிலையில் வினித் மயங்கிய நிலையில் சுயநினைவின்றி இருந்துள்ளான். அப்பொழுது பள்ளி நிர்வாகத்தினர் திருவீழிமிழலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வினித்தை கொண்டு சென்றுள்ளனர். வினித்தை பரிசோதித்த மருத்துவர்கள் வினித் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பிறகு வினித் உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினித்தின் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் மாணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!