நன்னிலம் அருகே பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை விஷம் அருந்தி தற்கொலை

நன்னிலம் அருகே பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை விஷம் அருந்தி தற்கொலை
X

தற்கொலை செய்து  கொண்ட பள்ளி தலைமை ஆசிரியை சத்யா.

நன்னிலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மருதுவாஞ்சேரி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் 35 வயதுடைய சத்யா.

இவருக்கு பிரபு என்பவருடன் திருமணமாகி பத்து வருடம் ஆகிய நிலையில் தர்ஷினி என்ற 7 வயதுவயது பெண் குழந்தை உள்ளது. தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சத்யா நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 15 வருடங்களக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் பள்ளியிலேயே விஷமருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சத்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

சத்யாவின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த நிலையில்..

பேரளம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சத்யாவின் உறவினர்கள் சரஸ்வதி மற்றும் ஆனந்த் சொல்லும்பொழுது பள்ளிக்கு சென்ற சத்யா மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளதாகவும் உடன் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!