மழையால் 'உடைந்து' போன மண்பாண்ட தொழில்: அரசு உதவிக்கரம் நீண்ட கோரிக்கை

மழையால் உடைந்து போன மண்பாண்ட தொழில்: அரசு உதவிக்கரம் நீண்ட கோரிக்கை
X
திருவாரூர் அருகே, மழையால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் 75 வயது மண்பாண்ட தொழிலாளர், அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில், கோவிந்தராஜ் வயது 75 இவர் மனைவி சந்திரா ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கு ஒரு மகள் கிருஷ்ணவேணி உள்ளார். அவரது கணவன் இறந்த நிலையில், மகளையும் தனது 2 பேத்திகளையும் கவனித்துக் கொண்டு, கோவிந்தராஜ் வசித்து வருகிறார்.

கோவிந்தராஜ், 12 வயது முதல் இன்று வரை, தள்ளாடும் வயதில் மண்டபாண்ட பொருட்கள் செய்து மட்டுமே, தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறார். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சிறு குடிசையில், இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மண்டபாண்டம் பொருட்கள் வியாபாரம் இல்லாமல், வாழ்வாதாரம் இழந்து நொடிந்து போயிருந்தார்.

இந்நிலையில், தற்போது சற்று நிலமை மேம்பட்டது. இன்று, கார்த்திகை தீப திருநாள் வரும் நிலையில், தீப திருநாளுக்கு அகல் விளக்கு செய்யும் பணியை கோவிந்தராஜின் குடும்பம் மேற்கொண்டு வந்தது. எனினும், தற்போது பெய்த கனமழை காரணமாக, மண்ணில் செய்த விளக்கை உலர்விக்க முடியவில்லை. மேலும் விளக்கை எரிப்பதற்கு உள்ள விறகும் நனைந்து விட்டது என வேதனை தெரிவித்தார். கொரோனா தாக்கம், தற்போது மழை பாதிப்பு ஆகியவற்றால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தங்கள் குடும்பத்திற்கு, தமிழக முதல்வர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோவிந்தராஜ் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!