திருவாரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் திறந்தார்

திருவாரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் திறந்தார்
X

திருவாரூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவாரூர் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்துவைத்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 11.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு கூடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் திறந்துவைத்தார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சரபோஜி ராஜபுரம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின்படி மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பரிந்துரையின் பேரில் மாவட்ட குழு உறுப்பினர் மணவை சுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட போர் பம்புடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து திருவிழிமிழலை ஆரம்ப சுகாதார வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட குழு உறுப்பினர் மணவை சுப்பிரமணியன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்