/* */

நெல் சேமிப்பு கிடங்கினை திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நெல் சேமிப்பு கிடங்கினை திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு
X
நெல் கொள்முதலை நிலையத்தினை திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட அத்திக்கடையில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10.01.2022 (நடப்பு சம்பா பருவம்) முதல் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 73 ஆயிரத்து 672 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.651 கோடியே 71 லட்சத்து 88 ஆயிரத்து 567 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 22 நெல் சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சத்து 12 ஆயிரம் மெ.டன் நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அத்திக்கடை பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு,சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் பாதுகாப்பாக உள்ளதா என்பதனை ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது வட்டாட்சியர் உஷாராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 March 2022 12:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...