திருவாரூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்

திருவாரூர் அருகே  ஆம்னி பஸ்  கவிழ்ந்த விபத்தில்  4 பேர் காயம்
X

திருவாரூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 4  பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர் அருகே அதிகாலையில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர் அருகே கீழ பனங்குடி கிராமத்தில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி 25 பேருடன் சென்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்கால் மதகில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லட்சுமி (40) ஹரிஷ் (11) அவரது சகோதரர் ரித்தீஷ் (5 )ஜெயா (52) ஆகிய 4பேருக்கு காயம் ஏற்பட்டது இவர்களை போலீசார் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணராஜ் (30) மற்றும் நடத்துனர் ராகுல் இருவரிடமும் நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business