சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம்

சத்துணவு ஊழியர் சங்கத்தின்  37வது அமைப்பு தினம்
X
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம் நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம், நன்னிலம் ஒன்றியத் தலைவர் வி.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். இராஜசேகரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெ.சசிகலா, வட்ட தலைவர் டி. கருணாமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். மணிசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், முகக்வசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!