நன்னிலம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியை துரிதப்படுத்த கோரிக்கை

நன்னிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம்.
Nannilam Bus Stand-திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் இருந்து சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகளும்.. கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு 27 பேருந்துகளும், நன்னிலம் சுற்றி உள்ள கிராமப்புற வழித்தடங்களுக்கு 9 நகர பேருந்துகளும் மொத்தம் 36 அரசு பேருந்துகளும், மற்றும் தனியார் பேருந்துகளும், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது...
நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு அதிக பேருந்துகள் வந்து செல்வதாலும்.. அதன் காரணமாக பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதாலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், கடந்த 2018- ல் தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முயற்சியில் பேருந்து நிலையம் விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.அதனை தொடர்ந்து பேருந்து கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், புதிய பேருந்து நிலையத்தை விரைவாக பயன்பாட்டு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து நன்னிலம் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் கூறும்போது" பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதால் பேருந்து நிலையத்திற்குள், பேருந்து செல்வதற்கும்...பொதுமக்கள் செல்வதற்கும்.. இடையூறாக உள்ளது எனவும், எனவே புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானங்களை துரிதமாக முடித்து புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu