நன்னிலம் அதிமுக வேட்பாளர் காமராஜூக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி

நன்னிலம் அதிமுக வேட்பாளர் காமராஜூக்கு  வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி
X
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜூக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் இரா.காமராஜ் ஆதரித்துப் குடவாசலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட்ட திமுக, இரண்டு ஆண்டுகளில் எந்தவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொண்டு திமுகவிற்கு சரியானப் பாடம் புகட்டத் தயாராகிவிட்டார்கள்.

ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டை வைத்துக்கொண்டு பேசுவது, அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஸ்டாலினின் முதல்வர் கனவு எப்போதும் நிறைவேறாது. வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால், இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. எனவே தற்போது அதிமுக தலைமையில் அமைந்துள்ள வெற்றிக் கூட்டணிக்கு, வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். திமுகத் தலைவர் ஸ்டாலின் அதிமுக அழிந்துவிடும் எனத் தொடர்நது கூறி வருகிறார். நான் முதலமைச்சரான போது, 10.நாள், 20 நாள், 30 நாள் என ஜோதிடம் கூறியவர் ஸ்டாலின். எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி, நான்காண்டுகள், தமிழக மக்களின் ஆதரவோடு, தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய அதிமுகக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

திமுக தலைவர் அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நிகழ்த்திய சதித்திட்டங்கள் கணக்கிலடங்காது. அனைத்தையும் முறியடித்து, 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்து முடித்துள்ளேன். இந்தத் தேர்தல் மட்டுமல்ல, எத்தனை முறை தேர்தல் நடைபெற்றாலும்,தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!