நன்னிலம் திமுக வேட்பாளர் ஜோதிராமன் வேட்பு மனு தாக்கல்

நன்னிலம் திமுக வேட்பாளர் ஜோதிராமன் வேட்பு மனு தாக்கல்
X
நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வேன் என வேட்புமனு தாக்கல் செய்தபின், நன்னிலம் சட்டமன்றத் திமுக வேட்பாளர் ஜோதி ராமன் பேட்டி .

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனையொட்டி பன்னிரண்டாம் தேதிமுதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் ஜோதிராமன் நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றார். நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பானுகோபனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நன்னிலம் திமுக வேட்பாளர் ஜோதிராமன், 10 ஆண்டுகாலம் அமைச்சர் பதவியில் இருந்தாலும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பல அடிப்படை தேவைகளை செய்ய தவறிவிட்டார். நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வேன் என பேட்டியளித்தார்.

Tags

Next Story
ai in future agriculture