திருவாரூரில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல்

திருவாரூரில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல்
X

திருவாரூரில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

100 நாள் பணி செய்து ஒரு மாதத்தை கடந்தும் இதுவரை வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்க வில்லை. என்பதை கண்டித்தும், பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்த்தி பணம் வரவு வைப்பதை தொடர்ச்சியாக செய்து வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாரூரில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேரளம் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் காரைக்கால் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

Tags

Next Story