திருவாரூரில் மக்களைத்தேடி மருத்துவ திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தக்குடி பகுதியில் "மக்களை தேடி மருத்துவம்" என்ற திட்டத்தினை பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தாா்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தக்குடி பகுதியில், மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன். தலைமையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தாா்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது : தமிழக அரசு மக்களை நோய் தொற்றிலிருந்து காப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தினை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்து, தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டத்தினை மக்களிடம் கொண்டு சேர்த்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
இத்திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட தொற்றாநோய் நோயாளிகளுக்கு, வசிப்பிடங்களுக்கே சென்று சிகிச்சையளித்தல், நோயாளிகளை ஒருமுறையேனும் பரிசோனை செய்தல், அவர்களை பராமரித்தல், தொற்றாநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 41255 நபர்கள் தொற்றாநோய் தொடர் சிகிச்சையில் பயனடைவார்கள். இத்திட்டத்தின் மூலம் வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 3609 நபர்கள் தங்கள் இல்லங்களிலேயே சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.
இந்நிகழ்வில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதா, திருவாரூர், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரேணுகாதேவி, கல்வி புரவலர்.அன்பரசன், மாவட்ட மலேரியா அலுவலர் .பழனிசாமி, வட்டாட்சியர் சந்தானம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu