17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோவில் கைது

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட பாலா.

17 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுனரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஐயாபிள்ளை என்பவரது மகன்.41 வயதான பாலா. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை வேளாங்கண்ணி லாட்ஜுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி சிறுமியுடன் பாலா உல்லாசமாக இருந்துள்ளார்.

மறுநாள் அந்த சிறுமி பாலாவிற்கு போன் செய்ததில் பாலா போனை எடுக்கவில்லை என்பதால், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமி குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்துள்ளனர்.

இந்த நிலையில் 17- வயது பெண் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்.. விசாரணை செய்து போக்சோ சட்டத்தின்கீழ் பாலாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
scope of ai in future