நன்னிலம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

நன்னிலம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு
X

கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

நன்னிலம் வட்டத்தில் உள்ள வண்டாம்பாளை, மகிழஞ்சேரி ஆகிய கிராமங்களில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை,மகிழஞ்சேரி ஆகிய கிராமங்களில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10.01.2022 (நடப்பு சம்பா பருவம்) முதல் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 529 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 25 ஆயிரத்து 664 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.254 கோடி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக வண்டாம்பாளை, மகிழஞ்சேரி ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும், அதை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக்கழக துணை மேலாளர் (கொளமுதல்); வெற்றிச்செல்வன், உதவி மேலாளர் மெய்கண்ட மூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்