நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
X

நன்னிலம் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

நன்னிலம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட நன்னிலம், பேரளம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

நன்னிலம், பேரளம், குடவாசல் பகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான நன்னிலம் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை காண முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உள்பட வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் 75 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வலங்கைமான் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நீடாமங்கலத்தில் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!