ஆலங்குடி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி உள்ளார்.
Alangudi Anjaneyar Temple-திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே, ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் 'ஞானபுரீ சித்திரகூட சேத்திரம்' ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், இடதுபுறம் ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.
33 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகை உடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆஞ்சநேயர் சுவாமி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சங்கடங்களை நீக்கி மங்கலம் அருளும் கூடியவராக இங்கு எழுந்தருளியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2-ஆம் நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி பச்சை பட்டு உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா நவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் முன்னிலையில், மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் அருளிய பஞ்சரத்தின கீர்த்தனை பாடி அனுமனை ஆராதித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu