வெகுவிமர்சியாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா
குரு ஸ்தலமான ஆலங்குடியில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆபத்சகாயேஸ்வரர்.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாள் குருபெயர்ச்சி என்று அழைக்கபடுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது,
அந்த வகையில் நவகிரகங்களில் நன்மை பயக்கும் பலன்களை வாரி வழங்கும் குரு பகவான் வீற்றிருக்கும் ஸ்தலங்களில் முதன்மையான பரிகார ஸ்தலமாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
வரலாறு சிறப்புமிக்க இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் குரு பகவானை அலங்கரித்திருந்தனர். அதிகாலை 4:16 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அதுசமயம் விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு குருபெயர்ச்சி விழா நடத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu