உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் வரவேற்பு
X

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு சால்வை அணிவித்தார் முன்னாள் அமைச்சர் காமராஜ்.

உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய மாணவியை முன்னாள் அமைச்சர் காமராஜ் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விஷ்ணுபுரம் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன்- புனிதா தம்பதியினரின் மகள் அபிராமி. இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தார். போர் சூழலில் மாட்டிக்கொண்ட மாணவி இன்று சொந்த ஊரான விஷ்ணுபுரம் பகுதிக்கு வந்ததையடுத்து முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் அந்த மாணவி அங்கு நடந்த சூழலையும் நிகழ்வையும் தெரிவித்தார். பின்பு அபிராமி இங்கேயே மருத்துவம் படிக்க வேண்டும் என காமராஜிடம் மனு கொடுத்து கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story