/* */

வலங்கைமான்: அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு பாதிப்பு

கண்டியூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வாந்தி 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

வலங்கைமான்: அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு பாதிப்பு
X

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், நேரில் பார்வையிட்டார். 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த 12 கண்டியூர் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். மதிய உணவாக, இன்றைக்கு நார்த்தம்பழம் சாதம் மற்றும் முட்டை வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள், வீட்டுக்கு சென்ற நிலையில், அவர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, பள்ளி மாணவர்களை ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிகிச்சைக்காக 39 பள்ளி மாணவர்களை அனுமதிக்கப்பட்ட பின்னர், மருத்துவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவர்களுக்கு காலாவதியான முட்டைகள் வழங்கப்பட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக என விசாரணையில் தெரியவந்தது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்தார். பள்ளி மாணவர்கள் மதியம் உணவு சாப்பிட்டதால் வாந்தி - மயக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை