குடவாசல் அருகே இருசக்கர வாகனங்களுக்கு தீ: காவல்துறை விசாரணை

குடவாசல் அருகே இருசக்கர வாகனங்களுக்கு தீ:  காவல்துறை விசாரணை
X

தீ விபத்தில் எரிந்த டூ வீலர்கள். 

குடவாசல் அருகே வீட்டு வாசலில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா புளிச்சகாடி கிராமத்தில் இளங்கோவன் என்பவர் வீட்டில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது. நேற்று விடியற்காலை 4.30 மணி அளவில் திடீரென வாகனங்கள் தீ பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிய காரணம் இதுவரை தெரியவில்லை..

இதுகுறித்து இளங்கோவன், குடவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். குடவாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். வாகனங்கள் மர்மமான முறையில்..எரிந்துள்ளது முன்விரோதம் காரணமா? அல்லது மின்கசிவின் காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் குடவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!