பேரளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பேரளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X
பேரளம் நெல்  கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்
பேரளத்தில் செயல்பட்டு வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், பேரளம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். தற்போது பல இடங்களில் அறுவடை பணிகள் முடிவுற்று, அறுவடை செய்த நெல் மூட்டைகளை பேரளம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்து காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அறுவடை பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேரளம்,கொல்லாபுரம்,குருங்குளம், திருமீச்சூர்,கொல்லுமாங்குடி,மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பேரளத்தில இயங்கி வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20- நாட்களுக்கு மேலாக அடுக்கி வைத்து காத்திருந்து வருகின்றோம்.

மேலும் நெல்மணிகள் அடிக்கடி பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்து முளைக்கவும் தொடங்கியுள்ளது. நெல் மூட்டைகளை தினந்தோறும் இரவு பகல் நேரம் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இது குறித்து பலமுறை மாவட்ட மண்டல மேலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக பேரளத்தில் செயல்பட்டு வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!