திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகள்

திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகள்
X

நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் சிறை பிடித்தனர்.

திருவாரூர் அருகே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை சிறைப்பிடித்த விவசாயிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே குடவாசலில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வியாபாரிகளின் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வந்ததால் அதனை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.

தொடர்ந்து விவசாயிகளின் புகார் அடிப்படையில் குடவாசல் காவல்துறை உதவியோடு வருவாய்த்துறையினர் 300 நெல் மூட்டைகள் அடுக்கியிருந்த லாரியையும் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட குடோனையும் கண்டுபிடித்து அந்த குடோனில் 4 முதல் 5 லாரிகளில் ஏற்றும் அளவிற்கு மேல் நெல்குவியல் குவியலாக இருந்தது.

வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடவாசலில் அமைந்துள்ள கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது . மேலும் இதுகுறித்து வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!