நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையங்களில்  மூட்டைக்கு  பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
X

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் கிராமத்திலுள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மூடைக்கு ரூ. 30 பணம் கேட்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர், கோவிந்தகுடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அந்த பகுதி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது..

இந்த நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 30 ரூபாய் கேட்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்..அரசு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் என நினைத்துள்ள நிலையில், 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை வாங்க படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்..

இதுகுறித்து கோவிந்தகுடி பகுதியை சேர்ந்த ராமு என்ற விவசாயி கூறியதாவது: ஏற்கெனவே மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்றி அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு சென்றால், ஒரு முட்டைக்கு அரசு 10 ரூபாய் நிர்ணயித்த நிலையில், 30 ரூபாய் கேட்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்தால் தான் கொள்முதல் செய்வோம் என்று கூறுகின்றனர். மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தினால் தான் வாங்கிய கடனை விவசாயிகள் திரும்ப செலுத்த ஏதுவாக இருக்கும்.. எனவும் இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்..

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா