வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

வலங்கைமானில் தனியாருக்கு விற்கப்பட்ட விதை நெல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
X

வலங்கைமான் வேளாண்மை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை 

வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள், அதை தனியாரிடம் விற்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கொடுத்ததின் பெயரில் நேற்று இரவு திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்

அப்பொழுது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியில் இருந்த வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 வேளாண்மை துறை ஊழியர்களிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதையை வேறு யார் யாரிடம் விற்கப்பட்டது, வேறு யாருக்கு இந்த விஷயத்தில் தொடர்பு உள்ளது என லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story