நிலத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம்

நிலத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம்
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.

நிலத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி பெண் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பத்மநாபன் தெருவை சார்ந்த ராஜீவ் என்பவருக்கு சக்திவேல், சீனிவாசன் என்கிற மகன்களும், மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.ராஜூ காலமான நிலையில் அவருடைய வாரிசுகளான சக்திவேல், சீனிவாசன், ராஜேஸ்வரி ஆகியோர்களுக்கு.. சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 28.08. 2021அன்று உழவு அடித்து, நாற்றங்காலுக்கு நெல் விதை விட்டிருந்த நிலையில் இவர்களின் தந்தை ராஜூவிடம் வேலை பார்த்து வந்த, வலங்கைமான் அருகே, அஸ்கானோடை பகுதியை சேர்ந்த அழகர் என்பவரது மகன் சிவசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் அவர்களுக்கு சொந்தம் என கூறி தகராறு செய்துள்ளனர்..

மேலும், 18. 10. 2021 அன்று நிலத்தில் உழவுக்கு சென்ற ராஜேஸ்வரி மற்றும் அவரது சகோதரர்களை சிவசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் செய்து விரட்டி அடித்துள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி வலங்கைமான் காவல் நிலையத்தில் 19. 10. 2021 அன்று சிவசாமி மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.. நீதிமன்றமே ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு தான் நிலம் சொந்தம் என தீர்ப்பளித்துள்ள நிலையில் சிவசாமி 19.10.21அன்று இரவே திருட்டுத்தனமாக நிலத்திற்கு வந்து உழவு செய்துள்ளதாக தெரிகிறது..

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு 10 முறைக்கு மேல் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாக ராஜேஸ்வரி மற்றும் அவரது சகோதரர்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story