/* */

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசு பொது மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் நன்னிலத்தில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

நன்னிலத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தலைமையில் அவரது இல்ல வாசலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலையை குறைப்பதாகவும், பெட்ரோல் விலையை குறைப்பதாகவும், சட்டமன்ற முதல் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும், மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிக்கு வழங்குவதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அதிமுகவினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை திமுக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தலைமையில் அவரது இல்ல வாசலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்பொழுது முன்னாள் அமைச்சர் காமராஜ், நிதி நிலைமையை காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களை தள்ளிப்போடுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த 'உரிமைகுரல்' ஆர்ப்பாட்டத்தில், நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்ந்த செல் சரவணன் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராமராவ் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 28 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது