திமுக அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு, தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு, தொண்டர்கள் அதிர்ச்சி
X
திமுக அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதையறிந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமைப் பதவியேற்க உள்ள திமுக அமைச்சர்களின் பட்டியல் வெளியானதைப் பார்த்த, நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதித் திமுக தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதைக் காணமுடிந்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான.திருவாருர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மேலும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்கள் உள்ளிட்ட டெல்டாப் பகுதிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தொண்டர்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கலைவாணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென, நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி மிகவும் நேசித்த திருவாரூர் மாவட்டம் திமுக அமைச்சரவையில் இடம் பெறாதது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயமாக, எந்த காரணத்திற்காகவும் திருவாருரை விட்டிருக்க மாட்டார் எனவும் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி, திமுகவிற்கு அதிக வெற்றியைத் தந்த நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது, மிகவும் கவலை அளிக்கக் கூடியச் செய்தியாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!