திருவாரூர்: ஊராட்சி தலைவரின் கணவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
தி.முக. ஊராட்சி தலைவரின் கணவர் கல்யாணசுந்தரம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா கரையாபாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். கரையாபாலையூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள மீனா என்பவரது கணவரான இவர்.கொரடாச்சேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த இவர் மீது, தற்பொழுது அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2011- ஆம் ஆண்டு கரையாபாலையூர் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் இருந்த போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஒரு பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது..
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக அப்போது, அப்பெண்ணிற்கு ஆதரவாக இருந்த சுமார் 10 குடும்பங்களின் வீடுகளை தாக்கியும், இருசக்கர வாகனங்களை உடைத்தும் அராஜகத்தின் ஈடுபட்டுளளார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கல்யாணசுந்தரம் மீது கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..அப்பொழுது கல்யாணசுந்தரம் தலைமறைவானார்.
இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்.. தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வரும் கல்யாணசுந்தரம் அவரால் ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக இருந்த மோகன்ராஜ், தேவா, மாதவன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட சுமார் 10 குடும்பங்களை பழிவாங்கும் நோக்கில்.. ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்.
மேலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு சலுகைகள் வருவதை தன் அதிகாரத்தின் மூலம் தடுத்து வருவதுடன், 100 நாள் வேலை வழங்குவதில்லை.அந்த ஊரில் வேலை பார்ப்பதற்கும் தடை விதித்து.. ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அந்த குடும்பங்களிடம் தொடர்பு வைத்துக் கொள்பவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, கடைகளில் பொருள் வாங்க தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu