தேங்காய் நார் பொருட்கள் தயாரிக்க பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

தேங்காய் நார் பொருட்கள் தயாரிக்க பயிற்சி  பெற்றவர்களுக்கு சான்றிதழ்
X

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தால் தேங்காய் நார் மூலம் பொருட்கள் தயாரிக்க பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தால் தேங்காய் நார் பொருட்கள் தயாரிக்க பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், அருகே உள்ள நீலக்குடி, ஆதமங்கலம், தியாகராஜபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை தத்து எடுத்து, அந்த கிராமங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அதன்படி, அந்தந்த கிராமங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் உயர, தேங்காய் நார் மூலம் பொருட்கள் செய்யும் பயிற்சியை வழங்கிவருகிறது. கடந்த எட்டு மாதங்களாக எட்டு குழுக்களுக்கு இந்த பயிற்சியை வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு பயிற்சி பெற்றதற்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக பல்கலைக்கழகத்தினால் தத்தெடுக்கப்பட்ட நீலக்குடி மற்றும் ஆதமங்கலம் ஆகிய கிராமங்களில், ரூபாய் 22 ஆயிரம் மதிப்புள்ள சூரிய ஒளியால் இயங்கக்கூடிய (சோலார்) விளக்குகளை 'உன்னத பாரத்' திட்டத்தின் சார்பாக நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.கிருஷ்ணன், வேலுடையார் கல்வி குழுமத்தின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுலோச்சனா, ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், திருவாரூர் மாவட்ட திட்ட மேலாளர் ஸ்ரீலேகா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பயிற்சி பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்