நன்னிலம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை

நன்னிலம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை
X

மண்பானை தயாரிப்பில் தொழிலாளி ஈடுபட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்நன்னிலம் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், தற்பொழுது பொங்கல் பண்டிகையையொட்டி சட்டி, பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்களை செய்து வருகின்றனர்..

மண்பாண்ட தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒன்றரை மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு மண் எடுத்துக்கொள்ளலாம் என அரசு அறிவித்த நிலையில் மண் எடுப்பதற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பானை, சட்டி போன்ற மண்பாண்டங்கள் தயாரிக்க மண் எடுக்க முடியாமல் இந்தத் தொழிலையே நம்பி இருக்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து எண்கண் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் சண்முகவேல் கூறும்போது

15 வயதிலிருந்து இந்த தொழில் செய்து வருவதாகவும், வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு சட்டிப்பானை செய்வதற்காக மண் எடுப்பதற்கு ஏகப்பட்ட பிரச்சனை என்றும், பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் வரை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.வயிற்று பிழைப்பிற்காக தலைச்சுமையாக மண் எடுத்து வந்து வேலை செய்துவருகிறோம். ஆண்டுக்கு இரண்டு முறை மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!