குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டின் உள்புற தோற்றம்.

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளை.. செயின், டி.வி, சிலிண்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அரசவனங்காடு பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் ஸ்ரீதரன் அவரது சகோதரர் முத்துசுவாமி வீடுகள் உள்ளன. முத்துசுவாமி கடந்த 10 நாட்களுக்கு முன் காசிக்கு யாத்திரை சென்றுள்ளார்.

இந்த நிலையில்.. நேற்று காசியில் இருந்து திரும்பி வந்த முத்துசுவாமி, வீட்டின் மதில்சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வாசல் நிலைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த உத்திராட்சையுடன் கூடிய தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பெரிய எல். இ.டி. டிவியும், புதிய சமையல் எரிவாயு சிலிண்டரும் திருட்டு போயுள்ளன.

இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்திற்கு தெரியப் படுத்தியவுடன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்