திருவாரூர் கோவில் விழாவில் தலைமைக் காவலருக்கு பீர் பாட்டில் குத்து
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே மேனாங்குடி கிராமத்தில் உள்ள சீத்தளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது/. தொடர்ந்து ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது.இந்த விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெற்றாமல் இருக்க பேரளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .அப்போது ஒரு இளைஞர்கள் கூட்டம் மது போதையில் பாடலை கேட்டு ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு நடனமாடினர்.
அங்கு அப்போது பணியில் இருந்த தலைமை காவலர் முருகவேல் என்பவர் அவர்களை விலக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பாலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன் (வயது 28 )என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து காவலர் முருகவேல் கன்னத்தில் அடித்துள்ளார், இதில் கன்னம் கிழிந்து ரத்தம் சொட்டிய காவலர் முருகவேலை காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை பேரளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu