நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்

நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள்  கருப்புக்கொடி போராட்டம்
X

நன்னிலம் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராமமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நன்னிலம் அருகே அடிப்படை வசதி செய்து தர வேண்டி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம்,நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கரை குளத்தெருவில் சுமார் 48 தினக்கூலி விவசாய மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது. இக்குளத்தை சுற்றிலும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக குளக்கரையில் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆண்டு கந்தசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குளத்துக்கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2019- ஆம் ஆண்டு, அரசு சார்பில் சக்கரைகுளம் அருகில் 5 வயல்கள் மற்றும் இரண்டு வாய்க்கால்களைதாண்டி (சுமார் 600 மீட்டர் தொலைவில்) பருத்தி திடல் என்ற பகுதியில் அரசு பட்டா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று வரை அப்பகுதிக்கு செல்ல சாலை வசதியோ, மின்சார வசதியோ, குடிநீர் வசதிகளை நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை. இப்பகுதி தனி நபர்களின் வயல் வரப்பு வழியாக செல்ல வேண்டிய நிலையே உள்ளது.மேலும் இதனிடையே இரண்டு வாய்க்கால்கள் குறுக்கே செல்வதால் பெண்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகளை வைத்திருப்பவர்கள் வாய்க்காலை கடந்து தாண்டி அந்த பகுதிக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியுள்ளதால் வட்டாட்சியர் இங்கு வசிக்கும் மக்களுக்கு வரும் திங்கட்கிழமை வீடுகளை அரசு சார்பில் இடிக்க உள்ளதாக நோட்டிஸ் அனுப்பிவுள்ளது.

எனவே தமிழக அரசு இப்பகுதி மக்களுக்கு அந்த திடலில் புதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்தும் உடனே செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலியுருத்தி குடியுருப்பு வாசிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!