11 ஆண்டுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் தீ வைத்து எரிப்பு

11 ஆண்டுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் தீ வைத்து எரிப்பு
X

நன்னிலம் அருகே 11 ஆண்டுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் தீயிட்டு அழிக்கப்பட்டது.

நன்னிலம் அருகே 11 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தண்டம்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பாண்டிச்சேரி சாராயத்தை தனது வீட்டின் அருகே கடந்த 2010ஆம் ஆண்டு பதுக்கி வைத்திருந்தார். அப்பொழுது, காவல்துறையினர் பிரகாஷை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 250 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து வைத்திருந்தனர்..

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரகாஷ் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளார். இதன் காரணமாக அந்த வழக்கானது முடிவுக்கு வந்துள்ளதால் அந்த சாராயத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள பணங்குடி கிராமத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழிதோண்டி பறிமுதல் செய்து வைத்திருந்த 250 லிட்டர் சாராயத்தை ஊற்றி தீயணைப்புத்துறை உதவியோடு, குற்றவியல் நீதித்துறை நடுவர் சீதாலட்சுமி மதுவிலக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் ஆய்வாளர் முன்னிலையில் தீயிட்டு எரித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!