நன்னிலம் அருகே 912 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

நன்னிலம் அருகே  912 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
X

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம் அருகே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 912 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பேரளம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் இருந்த ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (22), பரணிதரன் (22), கொல்லுமாங்குடியை சேர்ந்த முகமது இப்ராஹிம் (40) , ஆகிய மூன்று பேரையும் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்...

அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 612 கிலோ புகையிலை குட்கா மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை செய்ததில் இந்த புகையிலை பொருட்கள் நீடாமங்கலத்தில் இருந்து எடுத்து வந்ததாக கூறியதையடுத்து,போலீசார் நீடாமங்கலத்திற்கு விரைந்து சென்று அங்கு குடோனில் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ பான்மசாலாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முனியப்பன் என்பவரையும் கைது செய்து பேரளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!