நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4 பேர் கைது

நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4  பேர் கைது
X

தனியார் கல்லூரி பேருந்தை திருடியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் பகுதியிலுளள தனியார் கல்லூரி பேருந்து, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் மாலையில் நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் பேருந்தை எடுத்து மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வது உண்டு.

இந்நிலையில், எப்போதும் போல கல்லூரி பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலை வந்து பேருந்து ஓட்டுனர் பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காணாமல் பதறி உள்ளார்.

இதுகுறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் பேருந்து காணவில்லை என புகார் கொடுத்தார். இந்த நிலையில்.திருச்சிக்கும் கரூருக்கும் இடையே திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே பேருந்தை ரோந்து காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக நன்னிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தததிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள முருகதாஸ் மகன் சத்திய ஸ்ரீராம் என்பவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அவர் கொரோனாதொற்று காரணமாக வீட்டில் இருந்துள்ளார். அவரது கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார், அஷ்ரப், சதீஷ்குமார் ஆகியோர் சத்திய ஸ்ரீராம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் 4பேரும் சேர்ந்து மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தை திருடிக்கொண்டு திருப்பூரை நோக்கி சென்றுள்ளனர். இடையில் திருப்பராய்த்துறையில் ரோந்து காவல்துறையினரை பார்த்ததும் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்

இதை அடுத்து திருப்பூர் சென்ற தனிப்படையினர் சத்திய ஸ்ரீராம்,சிவக்குமார், அஸ்ரப், சதீஷ்குமார் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!