100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் திருவாரூர் கலெக்டரிடம் மனு

100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் திருவாரூர் கலெக்டரிடம் மனு
X

கிராம ஊராட்சி பணியாளர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு  கேட்டு திருவாரூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஊராட்சிகளில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் பணி பாதுகாப்பு வேண்டி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு குறைவாக அரசு உத்தரவின்படி பணிபுரிந்து வரும் பணியாளர்களை 100 நாள் நிறைவு பெறாத நிலையில் பணி நீக்கம் செய்ய முயற்சிப்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவினை பணித்தள பொறுப்பாளர்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக பணித்தள பொறுப்பாளர் ரமா சொல்லும்போது ஏற்கனவே பணியில் உள்ளவர்களை நீக்கிவிட்டு புதிய பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளதாகவும்,75 விழுக்காடு பெண்களுக்கே பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற உத்தரவு மீறப்படுவதாகவும், இந்த பணியை நம்பி தான் எங்கள் குடும்பம் உள்ளது எனவும், எங்களுக்கு பணி பாதுகாப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு