100 % வாக்களிக்க பிரச்சாரம்

100 % வாக்களிக்க பிரச்சாரம்
X

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட நன்னிலம்,ஆண்டிபந்தல், சன்னாநல்லூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஒளிபரப்பில்... 'வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை' என்றும் 'எந்த சூழ்நிலையிலும் வாக்குகளை விற்காமல் வாக்களிப்பது நமது உரிமை' என்பது குறித்தும் தேர்தல் ஆணையத்தின் குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த ஒளிபரப்பினை நன்னிலம் பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். நன்னிலம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் நாகராஜன், ரவி உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு ஒளிபரப்பை கண்டுகளித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது