குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது

குழந்தையை தீ வைத்து எரித்த தந்தை கைது
X

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 4 வயது குழந்தையை, தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த நிகழ்வில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை உயிரிழந்தது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் என்பவரது மகன் ராம்கி (29). இவருக்கு காயத்ரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 26.02.2021 அன்று ராம்கி அவரது மனைவி காயத்ரியிடம் தகராறு செய்த நிலையில் மூத்த மகன் சாய்சரண் (4) மேல் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள், குழந்தையை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் ராம்கியின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் துறையினர் ராம்கியை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சாய்சரண் உயிரிழந்தார். பின்னர் குழந்தையின் உடல், தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் ராம்கியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, தற்பொழுது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!