வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் பார்வையிட்டார்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் பார்வையிட்டார்
X
கட்டுப்பட்டு அறையில் அமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டார்.

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவாரூர், திரு.வி.க.கலை கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 24 மணிநேரமும் பார்வையிடுவதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சி வசதியுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!